தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு
நாகை ஏப்ரல் 7
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவரும் வாழ்வில் முன்னேற்றம் அடைய பல நலத்திட்டங்களைத் தீட்டி அவற்றை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நாள் முதல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதோடு, சொல்லாத பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அளித்த அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாக தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டு 01.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் ரூ.6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படஉள்ளது. மொத்த நகைக் கடன்களின் எண்ணிக்கை 13,47,033 ஆகும். இதன் மூலம் 10,18,066 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 73 கூட்டுறவு நிறுவனங்களில் 40 கிராம் வரை கடன் பெற்ற 18,412 நபர்களின் கடன் தொகை ரூ.5371.27 இலட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு;ள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் -59, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்-02, வேதாரண்யம் உப்பு உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்- 01, வேதாரண்யம் வேளாண் உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்-01, வேதாரண்யம் ஊரக வளர்ச்சி வங்கி -01, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் -09 என மாவட்டத்தில் 73 கூட்டுறவு நிறுவனங்களில் 40 கிராம் வரை கடன் பெற்ற 18,412 நபர்களின் கடன் தொகை ரூ.5371.27 இலட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது இதற்கு பொதுமக்கள் பலரும் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

