நாகையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பள்ளி மாணவி ஹவ் திங் ஒர்க் தலைப்பில் மாவட்ட அளவில் முதலிடம்
நாகை ஏப் 7
நாகப்பட்டினம் புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் கண்காட்சியில் மாணவர்களால் வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருள்களை பார்வையிட்டார்.
பின்னர் ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி மு.அபிராமி ஹவ் திங் ஒர்க் என்ற தலைப்பில் காட்சிபடுத்திருந்த ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதி குறைந்த செலவில் தயார் செய்து மாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த மாடல் இந்த தலைப்பில் முதலிடத்தை பெற்றது. இதை செய்ய தயார் படுத்திய பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா ஜேனட் மற்றும் அறிவியல் ஆசிரியர் ராஜராம் மற்றும் பள்ளி ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

