வேதாரண்யத்தில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.
வேதாரணியம் ஏப்ரல் 7
நாகை மாவட்டம்
வேதாரணியம் சி.க.சு.அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு
சி.க.சுப்பையாப் பிள்ளை அறக்கட்டளை மற்றும் இராஜாளிக் காடு ஆறுமுகனார் அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் சி. அன்பழகன் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் எஸ். எஸ். தென்னரசு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார் . சி.நாகராஜன் வரவேற்புரையுடன் அறக்கட்டளைகள் அறிமுக உரை நிகழ்த்தினார். சி.க.சுப்பையா பிள்ளை அறக்கட்டளை நிறுவனர் மாரியப்பன் 2020 மற்றும் 2021 ஆகிய இரு ஆண்டுகளில் பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற எட்டு மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை கல்வி உதவித் தொகையாக வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.


வேதாரண்யம் இராஜாளிக்காடு ஆறுமுகனார் அறக்கட்டளை சார்பில ஆறு மாணவர்களுக்கு தலா ரூபாய் 3600 வீதம் ரூபாய் 21,600 வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் எழிலரசன், ராமகிருஷ்ணன், தியாகராஜன், ஆதவன்,அன்பழகன்,புகழேந்தி,சுப்ரமணிசாமி,உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் ஆசிரியர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

