கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
நாகை ஏப் 7
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழபிடாகை ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம ஊராட்சியில் நடைபெறும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பணிகள் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் விவரம் குறித்த கோப்புகளையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் குழந்தைகளுக்கு சத்துணவு தயார் செய்யப்படுவதையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து காரப்பிடாகை வடக்கு ஊராட்சியில் உள்ள நியாய விலைக்கடையினையும், அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், வடக்குத் தெரு சாலையினை சிமெண்ட் சாலையாக அமைக்கும் பணி முடிவுற்றதையும், ஸ்டாலின் நகர் சாலையை ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணி முடிவுற்றதையும் பார்வையிட்டார். அதேகிராமத்தில் குடிசை வீட்டில் வாழும் ஆதரவற்ற தையல்நாயகி என்ற முதியவரை நேரில் சந்தித்து அவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படாமல் இருப்பதால் உடனடியாக அதை வழங்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


ஆய்வில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் ராஜசேகர், ஊரக வளர்ச்சி இளநிலை பொறியாளர்கள் வெற்றிவேல், சுகுமார் உட்பட அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

