காணாமல்
போனவரை மீட்டு
குடும்பத்தாருடன் சேர்த்து
வைத்த நாகப்பட்டினம் காவல் துறை.
நாகப்பட்டினம் ஏப் 07
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், எல்லூர் ரோட்டைச் சேர்ந்த 50 வயது வாசுதுபாஷி சீனிவாசராவ்
என்பவருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை மாதா கோயிலுக்கு பிரார்த்தனைக்காக குடும்பத்துடன் வந்தனர். கடந்த13.03.2022 காலை தனது குடும்பத்தினருடன் நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் பேருந்தில் ஏறியபோது அந்த பேருந்து வேளாங்கண்ணி செல்லாது
என்று கூறியதால் அவருடன் சென்ற அனைவரும் இறங்கிவிட
மனநலம் பாதிக்கப்பட்ட வாசுது பாஷி சீனிவாசராவ் மட்டும்
பேருந்தில் சென்று விட்டார் . எங்கு தேடியும்
காணாததால் நாகை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு காணாமல் போனவரை கண்டுபிடித்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் ஆகியோரது தலைமையில் அவரது குடும்பத்தினரை வரவழைத்து அவரை ஒப்படைத்து அறிவுரை வழங்கினார்கள்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

