நாகையில் மாற்றுத்திறனாளிகள் நல விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நாகை மார்ச் 6
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைசார்பில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தினவிழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் 5ம் தேதி தொடங்கி வைத்து 724 மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு ரூ.93,56,584 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளில் திறமை படைத்தவர்களை கண்டறிவதற்காகவே மாற்றுத்திறனாளி என்ற சொல்லை உருவாக்கி மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக மாற்றுத்திறனாளி நலத்துறை என்ற தனித்துறையை உருவாக்கி அவர்களுக்கு தனிகவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்வில் பயன் பெற வழிவகை செய்து சமுதாயத்தில் சமவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்ற வகையில் நல்ல பல சீரிய திட்டங்களை செயல்படுத்தி தனது நேரடி பார்வையிலேயே மாற்றுத்திறனாளி நலத்துறையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கவனித்து வருகிறார்கள்.


மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் செல்கிற இடங்களில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு, தொழில் செய்ய வங்கி கடன், மாற்றுதிறனாளிக்கு தேவையான உபகரணங்கள் போன்ற 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறார்கள். அந்த வகையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதலின் படி கிடைக்க பெறாதவர்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்ற மனநோக்குடன் அனைவரும் உதவி மனப்பான்மையுடன் செயல்படவேண்டும் என்பதற்கு உதாரணமாக நம் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறன் கொண்ட சிறுவன் சிறப்பா ஓவியம் வரைவதை அறிந்து, சிறுவனின் வீட்டிற்கே சென்று ஓவியம் வரைவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கி பெருமை சேர்த்துள்ளார் எனமேலும், இவ்விழாவில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களும் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்துக் கொள்ள மாவட்டம் நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்யப்படும் எனவும் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தவிழாவில் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டரும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்,தனித்துவம் வாய்ந்த பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியினையும், மூன்று சக்கர சைக்கிளையும் மடக்கு சக்கர நாற்காலியினையும், காதுக்கு பின் அணியும் காதொலி கருவியினையும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி கடிகாரம், ஒளிரும் மடக்கு குச்சியினையும், வங்கி கடனுக்கான மானியத்தினையும், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்தினையும், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும், இலவச பேருந்து பயண அட்டையினையும், மாற்றுத்திறனாளிகளின் காப்பாளர்களுக்கு வாழ்நாள் பராமரிப்பு உதவி தொகையினையும், மற்றும் கல்வி உதவி தொகை போன்றவைகளுக்கு என மொத்தம் ரூ.93,56,584 மதிப்பீட்டில் 724 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, நகரமன்ற தலைவர் மாரிமுத்து, ஒன்றியக் குழு தலைவர் அனுசியா, வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சமூகபாதுகாப்புதிட்டம்) ராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உட்பட அரசுஅலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

