கம்பத்தில் சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மற்றும் கல்லுரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு
கம்பம் : ஏப்ரல் : 06 தேனி மாவட்டம் கம்பத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆன் லயன் சைபர் குற்றங் குறித்து பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு குறித்த கூட்டம் நடைபெற்றன.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆன் லயன் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு ந டவடிக்கைகள் மேற்கொன்டு வரும் நிலையில் கம்பம் போக்குவரத்து காவல்துறையினர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவீண் உமேஜ் டேங் ரோ அவரகளின் உத்தரவின் பெயரிலும் மாவட்ட உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்த்தா அவர்களின் அறிவுறுத்தல் படியும் கம்பம் போக்குவரத்து காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் செந்தாமரைக்கண்ணன் உதவி காவல் ஆய்வாளர் ஞானபண்டித நேரு ஆகியோர் விழிப்புணர்வு முகாமை ஏற்பாடு செய்து இருந்தனர் மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுவதை எவ்வாறு தடுப்பது ஏடிஎம் கார்டுகளில் ரகசிய எண்களை வேறு யாரிடமும் பகிரகூடாது என்பது குறித்தும் அவ்வாறு குற்றங்கள் நடைபெறுவது தெரிய வந்தால் அவசர உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வுகளை கம்பம் போக்குவரத்து காவல்துறை மூலம் எடுத்து கூறப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்
S விஜய லிங்கராஜா

