தனியார் நிறுவனங்களின் முதலாம் ஆண்டு விழா- மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு.
வேதாரணியம் ஏப்ரல் 04
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசின் சார்பில் கடந்த ஆண்டு வேதா ஆயத்த ஆடை பூங்கா துவங்குவதற்கு முன்னோட்டமாக திருப்பூரில் இருந்து பிரித்வி , எஸ்.டி எனும் இரண்டு உள்ளாடை உற்பத்தி நிறுவனக் கிளை வேதாரண்யத்தில் தொடங்கப்பட்டது . முதலாம் ஆண்டு விழா வேதாரணியம் அடுத்த தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். பிரித்வி நிறுவன அதிபர் வரவேற்றார்.இவ்விழாவில் தமிழக மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஓ. எஸ் .மணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கே. வேதரத்தினம் நகர்மன்றத் தலைவர் மா.மீ.புகழேந்தி, குருகுலம் அறக்கட்டளையின் அ.வேதரத்தினம் , மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வழக்கறிஞர் சுப்பையன், ஊராட்சி தலைவர் கவிதா தர்மராஜன், இரு நிறுவன தலைவர்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.எஸ்.டி நிறுவன அதிபர் நன்றி கூறினார். முன்னதாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ்
லாய் மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

