நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு கௌரவ விருது.
நாகப்பட்டினம் ஏப்ரல் 04
நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் திரு.முஹம்மது அலி அவர்கள் கல்வி பணி ஆற்றுவதோடு சமூகப் பணியும் ஆற்றி வருகிறார்.
கஜா புயலின் போது நாகை மற்றும் சுற்று வட்டார பள்ளிகள் கிராமங்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து வழங்கினார். தனது நண்பர்களுடன் சேர்ந்து வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
அதேபோல் கொரோனோ அலையின் போது நாகை நாகூர் பகுதி மக்களுக்கு ஆக்சிசன் உருளைகள் பெற்று கொடுத்தார். மேலும் கொரோனாவில் இறந்தவர்கள் அவரவர் மத வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்ய உதவினார்.
அவரை பாராட்டி
உலகத் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கிய சேவைக்கான கௌரவ முனைவர் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கௌதியா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மு.முஹம்மது அலி அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் கிடைத்துள்ளது .
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ்
லாய் மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

