• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பொதுமக்களை மரியாதையுடன் நடத்த ஆவடி காவல் நிலையத்தில் வரவேற்பு பிரிவு ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
April 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பொதுமக்களை மரியாதையுடன் நடத்த ஆவடி காவல் நிலையத்தில் வரவேற்பு பிரிவு  ஆவடி கமிஷனர்  சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முதல்வர் ஆணைக்கிணங்க புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த ஆவடி காவல் நிலையத்தில் வரவேற்பு பிரிவு

ஆவடி கமிஷனர்

சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்.

 

சென்னை, ஏப்ரல், 4

 

ஆவடி காவல் நிலையத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வரவேற்பு பிரிவு தொடக்க விழாவில் பங்கேற்ற ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற்றுக் கொண்டார்.

 

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதல்வர், காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வரும்போது அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

இதையடுத்து, தமிழகத்திலேயே முதன்முறையாக திருவள்ளூர் மாவட்டம், ஆவடி டி-6 காவல் நிலையத்தில் வரவேற்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். மேலும், ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் வரும் 25 காவல் நிலையங்களிலும் இந்த வரவேற்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

 

இங்கு பயிற்சி அளிக்கப்பட்ட காவலர், பணியில் ஈடுபடுவார். அத்துடன், புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

இப்பிரிவின் மூலம் புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்துவதோடு அவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், காவல் நிலையத்தில் கூட்டம் சேர்வது தடுக்கப்படும்.

 

இதேபோல், ஆயுதப் படை காவலர்கள் விடுப்பு எடுக்க விண்ணப்பிப்பதற்கான செயலியையும் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், ஆயுதப்படை காவலர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை விரைவாக பரிசீலனை செய்ய முடியும் என ஆவடி காவல்ஆணையரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நெல்லை மாநகரின் 41வது மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் பதவியேற்பு

Next Post

நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு கௌரவ விருது

Next Post
நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு கௌரவ விருது

நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு கௌரவ விருது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In