நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி – பேரணியை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி- பேரணி விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் கொடியசைத்து ஆரம்பித்து வைத்து பேரணியிலும் கலந்து கொண்டார்கள். பேரணியில் மாணவர்கள் உலக அமைதி வேண்டியும், பொதுமக்கள் ஒற்றுமைக்காகவும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்தப் பேரணியானது விளாத்திகுளம் பேருந்து நிலையம் வழியாக வந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்று ஆனந்த விநாயகர் கோவிலில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் நாகலாபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் திரு.சுரேஷ் பாண்டியன் அவர்கள், விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் திரு.காசிலிங்கம், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


