• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர்கள் கைது – ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன் தங்க நகைகள், 90 கிலோ காப்பர் வயர், செல்போன் டவர் உபகரணங்கள் – ரொக்க பணம் 2,40,000/- மீட்பு –

policeseithitv by policeseithitv
April 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர்கள் கைது – ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன் தங்க நகைகள், 90 கிலோ காப்பர் வயர், செல்போன் டவர் உபகரணங்கள் – ரொக்க பணம் 2,40,000/- மீட்பு –
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 எதிரிகள் கைது – ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன் தங்க நகைகள், 90 கிலோ காப்பர் வயர் மற்றும் செல்போன் டவர் உபகரணங்கள் மற்றும் ரொக்க பணம் 2,40,000/- மீட்பு – மேற்படி திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு வாகனம் பறிமுதல். மேற்படி எதிரிகளை கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.

♻️தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குளில் ஈடுபடுபவர்களை கண்டறியும்பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

♻️அதன்படி கடந்த 02.03.2022 அன்று தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சொக்கலிங்கபுரம் மேற்கு தெருவை சேர்ந்த சோமசேகர் மனைவி லெட்சுமிபிரியா (24) என்பவரது திறந்திருந்த வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், வீட்டின் அலமாரியில் இருந்த 10½ பவுன் தங்க நகைகளை திருடியதாக நேற்று (31.03.2022) லெட்சுமிபிரியா அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், சொக்கலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் மனைவி சுப்பம்மாள் (48), அவரது கணவர் மாணிக்கம் (56) மற்றும் இவர்களது மகள் பத்திரம் (30) ஆகிய 3 பேரும் சேர்ந்து மேற்படி லெட்சுமிபிரியா வீட்டில் தங்க நகைகளை திருடியது தெரிவயவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 3,10,000/- மதிப்புள்ள 10½ பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

♻️அதேபோன்று கடந்த 30.03.2022 அன்று கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குடப்ட்ட ஓணாமான்குளம் பகுதியில் உள்ள தனியார் சோலார் கம்பெனியில் இருந்து ரூபாய் 90,000/- மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிய வழக்கில் கடம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடம்பூர் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த காசி மாடசாமி மகன் ரமேஷ் (39) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி சோலார் கம்பெனியில் காப்பர் வயர்களை திருடியது தெரிய வந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி ரமேஷ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 90,000/- மதிப்புள்ள காப்பர் வயர்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தபட்ட லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் மற்ற எதிரிகளை தேடி வருகின்றனர்.

♻️அதேபோன்று கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தார் சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பண்ணன் மகன் கணபதி பாண்டியன் (52) என்பவருக்கு சொந்தமான கயத்தார் டூ கடம்பூர் ரோடு பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் நேற்று (31.03.2022) ரூபாய் 2,40,000/- பணம் திருடு போன வழக்கில் கயத்தார் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொணடதில், கோவில்பட்டி காமராஜ்நகரை சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் கணேசன் (58) என்பவர் மேற்படி நிறுவனத்தில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி கணேசனை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 2,40,000/- பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

♻️அதேபோன்று எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகாசலபுரம் பகுதியில் உள்ள தனியார் செல்போன் டவரில் இருந்து ரூபாய் 1,00,000/- மதிப்புள்ள கருவிகளை திருடிய வழக்கில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பசுவந்தனை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்களான சுப்பையா மகன் 1) சசிக்குமார் (35), கருப்பையா மகன் 2) சின்னத்துரை (43), ஜமீன் இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த கணபதி மகன் மணிகண்டன் (32) மற்றும் சிவகாசி, சின்னல்பொட்டல்பட்டி பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் 4) சங்கரேஸ்வன் (31) ஆகிய 4 பேரும் சேர்ந்து மேற்படி செல்போன் டவரில் திருடியது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 1,00,000/- மதிப்புள்ள கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

♻️மேற்படி திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 7,40,000/- மதிப்புள்ள நகை, பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.

Previous Post

ஶ்ரீவை, தொகுதியில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த விளையாட்டு கிராமம் (Sports Village) , மகளிர் விளையாட்டு  அமைக்க கோரிக்கை

Next Post

நாகலாபுரம் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி – பேரணியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Next Post
நாகலாபுரம் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி – பேரணியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

நாகலாபுரம் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி - பேரணியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In