தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது வீர மரணமடைந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்களின் புகைப்படத்திற்கு நேற்று மதுரை தென்மண்டல ஐ.ஜி எஸ்.முருகன் அவரது வீட்டிற்கு நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.
ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்கள் கடந்த பிப்ரவரி 01 அன்று கொலை செய்யப்பட்டு வீர மரணமடைந்தார்.

அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன் இ.கா.ப அவர்கள் நேற்று நேரில் சென்று பாலு அவர்களின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவரது மனைவி பேச்சியம்மாள், மகன் அருண் வேலாயுதம், மகள் ஜெயதுர்க்கை வேணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஞானராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

