தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் முப்பெரும்விழா – முன்னாள் ஏடிஜிபி காமராஜா ஐபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது
தூத்துக்குடியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், தேவேந்திர குல வேளாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா வருகிற 6.2.2021 சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ராமலெட்சுமி மஹாலில் வைத்து நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஏடிஜிபி, பன்னாட்டு நீதிமான் வி.காமராஜா ஐபிஎஸ் (தேசிய தலைவர், தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை) தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் வீரா.அரவிந்தராஜா தென்மண்டல செயலாளர் முன்னிலை வகிக்கிறார்.

வருகிற 6ம் தேதி நடைபெற உள்ள இந்த முப்பெரும்விழா நிகழ்ச்சி குறித்து இன்று தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வீரா.அரவிந்தராஜா பேட்டியளித்தார். அப்போது: கிராம புறங்களில் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்துவது. 3 மாதங்களில் சுமார் 1000 தொழில்முனைவோர்களை உருவாக்குவது என்பது உள்ளிட்ட முக்கிய விசயங்கள் குறித்து செயல்வீரர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், தேவேந்திர குல வேளாளர்கள் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது போன்ற நிகழ்வுகள் இந்த முப்பெரும் விழாவில் நடைபெற உள்ளதாகவும், இதில் மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
பேட்டியின் போது, தூத்துக்குடி எஸ்.சுப்புலெட்சுமி, புகழேந்தி மணியன், ஜெயமுருகன், விளாத்திகுளம் சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

