வேதாரண்யம் அருகே வீட்டில் குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணம் கொள்ளை- முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்.
வேதாரணியம் மார்ச் 31
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வடமழை மணக்காடு ஊராட்சியில் 70 வயது முதியவர் பன்னீர் செல்வம் என்பவர் வசித்துவருகிறார் .
அவரது மனைவி திலகவதி வயது 55 .இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் திருமணம் ஆகிவிட்டது.
இவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு முகமூடி அணிந்த 10 பேர் கொண்ட கும்பல் பிறந்து 45 நாட்களே ஆன பன்னீர் செல்வத்தின் உடைய பேரப்பிள்ளை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பீரோவில் உள்ள பணம் நகைகளை எடுக்க சொல்லி மிரட்டி உள்ளனர். அப்போது அவர்கள்
65 பவுன் நகை . மூன்றரை லட்சம் ருபாய் பணம் எடுத்துக் கொடுத்து உள்ளனர். நீண்ட நேரம் அங்கு இருந்த பிறகு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.



இச்சம்பவம் குறித்து நாகை எஸ்பி ஜவகர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.நள்ளிரவில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

