கோடிக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் புள்ளிமான் – வனத்துறையினர் விசாரணை.
வேதாரணியம் மார்ச் 31
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், நரி, முயல், காட்டுப்பன்றி, குதிரை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் வன உயிரின சரணாலயத்தை விட்டு வெளியில் உள்ள அடர்ந்த கருவேல மர காடுகளுக்குள்ளும் புள்ளி மான்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
இன்று காலை மீன்பிடி படகு துறைமுகத்தில் இருந்து 5 கிலோமீட்டர் மேற்கே மன வாய்க்கால் ஆற்றுக்கு அருகே பெண் புள்ளிமான் ஒன்று கடற்கரையோரத்தில் குடல் வெளிவந்த நிலையில் இறந்து காணப்பட்டது. அப்பகுதி வழியே கரையோர மீன் பிடிப்பிற்கு சென்ற மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் அயூப்கான் தலைமையிலான வனத்துறையினர் பெண் புள்ளிமானை உடற்கூறாய்வு சோதனைக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தண்ணீர் தேடி சென்ற புள்ளிமானை நாய்கள் விரட்டி மான் கடலுக்குள் சென்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியதா? அல்லது கடற்கரையோரத்தில் நாய் புள்ளி மானை துரத்தி கடித்து , மான் இறந்ததா..? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

