தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் வினோத்குமார். இவர்தனக்கு முதல்நிலைய காவலர் பதவி உயர்வு பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது என்பதை அறிந்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களிடம் முறையிட்டார். அவர் மனு கொடுத்த 10 நிமிடத்தில் மனு மீது துரித நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டத்தின் பேரில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் பூரித்துப்போன அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த தகவல் என்னவென்றால்:
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தெய்வமாக விளங்கும் மனித நேயமிக்க எங்கள் எஸ்.பி திரு. ஜெயக்குமார் ஐயா அவர்களுக்கு என் சார்பாகவும், எனது குடும்பத்தார் சார்பாகவும் நன்றி.

என்னுடைய பெயர் வினோத்குமார், நான் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் நான் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருகிறேன்.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் நிலைக் காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதில் என்னுடைய பெயர் விடுபட்டு இருந்தது.
இதனால் மன வேதனையில் இருந்த நான் இன்று மாவட்ட எஸ்.பி. அவர்களை சந்தித்து இதற்கு மனு அளித்தேன். அனைவரின் நலனிலும் அக்கறை கொண்ட மாவட்ட எஸ்.பி அவர்கள் என்னுடைய மனுவை பரிசீலனை செய்து உடனடியாக 10 நிமிடத்தில் எனக்கு முதல் நிலைக் காவலர் பதவி உயர்வு வழங்கி ஆணை பிறப்பித்து, அதையும் உடனடியாக எனக்கு வழங்கி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நன்றி ஐயா – இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களின் காவலர் ஒருவரின் மனக்குமுறலை தீர்க்கும் வகையில் எடுத்த அதிரடி நடவடிக்கையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

