துளசியாப்பட்டினத்தில் அரசின் சார்பில் 48-ம் ஆண்டு ஒளவை பெருவிழா
வேதாரணியம் மார்ச் 29
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் ஒளவை- விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் இறைபணியுடன் சமூகப்பணியும் செய்து வந்த தமிழ் மூதாட்டி ஒளவைக்கு தனிசன்னதி உள்ளது சிறப்புக்குரியது.
ஒளவை விழாவை சமய வேறுபாடின்றி கடந்த 48 ஆண்டுகளாக கிராம மக்கள் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக நடைபெற்ற 48வது ஆண்டு விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ப.ராணி வரவேற்றார். ஆத்திச்சூடி போன்ற ஒளவையாரின் பாடல்களை பாடி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ. மாணவிகளுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். பெண்பாற் புலவர்களில் சிறப்பு மிக்கவர்.
ஒளவையார் அரிய கருத்துக்களை எளிய நடையில் தந்தவர் ஒளவையார் .
கொல்லன் திடல் என்ற ஊரில் அவ்வையார் தங்கியிருந்தபோது அப்பகுதியை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. அவரை வேறு இடம் நோக்கி செல்லுமாறு வேண்டினான் கொல்லன். அதற்கு ஒளவையார் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறி

“வல்லனும் வெள்ளையாகி வளவனும் பேருராகி கொல்லன் திடல் தவிர கொள்ளாப் பெருங்கடலை “என்று ஒளவையார் பாடியதும் அந்த ஊரை சூழ்ந்த வெள்ளம் வளவனாற்றில் வடிந்ததாக வரலாறு என்றும் ஒளவையாருக்கு என தனி ஆலயம் இருந்து அதில் அரசு விழாவாக நடைபெற்ற இந்த ஆலயத்திற்கு வந்து தரிசித்து அதில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பெருமிதம் கொண்டார் .
இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி , இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அறிவழகன் , ஆய்வாளர் பெ. ராமதாஸ் , பட்டிமன்ற நடுவர் கவிஞர் .நாகை. நாகராஜன் ,நகர கூட்டுறவு வங்கி தலைவர் மா. மீ. அன்பரசு மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

