*இன்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.*
???? *நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பசுவந்தனை பகுதியில் ஏழு நாட்கள் ஏற்பாடு செய்த நாட்டு நலப்பணி திட்ட நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு மேலாண்மை விழிப்புணர்வு, SOS செயலி விழிப்புணர்வு, சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு, போக்சோ சட்டம், இணைய வழி பொழுது போக்கான பேஸ்புக், வாட்ஸப் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், மாணவ மாணவிகளிடம் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.*
???? *மேலும் மாணவ மாணவியர்களுக்கு கிராமப்புற மேம்பாடு, சுற்றுசூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றியும், மரம் நடுதல், சுகாதார மேம்பாடு பற்றியும் கொரோனா பரவலை தடுக்கும் முன்னேச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.*
???? *இந்நிகழ்ச்சியில் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் கலைமற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் திரு.காசிராஜன், கல்லூரி துணை முதல்வர் முனைவர் திரு.சேதுராஜன், பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சந்திரகலா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் திரு.வேல்ராஜ், முனைவர் திரு.கார்த்திக் செல்வன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஊர் பொது மக்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.*

