நாகப்பட்டினத்தில் தொழிற்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு
நாகை மார்ச் 28
நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஏ.டி.எம். கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம் சார்பாக நாகப்பட்டினம் ஏடிஎம் மகளிர் கல்லூரியில், கல்லூரி மாணவியர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் இராணுவத்தில் வேலைவாய்ப்பு, உயர்க்கல்வி, போட்டித்தேர்வு மற்றும் புதுமைப்பெண் என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. கண்காட்சியில் பெண்கள் கல்வி குறித்தும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விளக்கத்தினையும், அரசு பணிக்கு வரும் நபர்கள் தன்னலமற்ற மக்கள் சேவையாற்றிடவும், பலதரப்பட்ட அடிதட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.


மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக ஆண்டு தோறும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடுஅரசால் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கு இவ்வலுவலகத்திலேயே நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் காலாண்டுக்கொரு முறை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
இந்த கருத்தரங்கு கண்காட்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா, கல்லூரி முதல்வர் முனைவர் அன்புச்செல்வி, பிரகாசம், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கருத்தாளர்கள் செங்குட்டுவன், துரைக்கண்ணன் மற்றும் லாவண்யாஆகியோர் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

