திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர், மார்ச் 28
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இன்று 28/03/2022
சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்யும் ஆண்கள் மேலாடை இல்லாமல் தரிசனம் செய்ய வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. அதன்படி, அன்பில் மகேஷும் சட்டை இல்லாமல் முருகனை தரிசனம் செய்தார். முன்னதாக, அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வெற்றி பெற்று கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற உடன்
கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இன்று மாலை தூத்துக்குடி வருகை தந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

