நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகை மார்ச் 28
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித் தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 152 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம், ஒக்கூர் ஊராட்சி வடகடம்பன்குடி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி என்பவருடைய மகளின் மருத்துவச் செலவிற்காக மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் காசோலையினையும், கீழ்வேளுர் வட்டம், ராதாமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த வசந்தி என்பவரின் மருத்துவ செலவிற்காக மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.10ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

