விளாத்திகுளம் உட்கோட்டத்தில் காடல்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1750 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாகனம் பறிமுதல் போலீஸ் விசாரணை .*
???? *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.L. பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.*
???? *இந்நிலையில் காவலர்கள் காடல்குடி டு பெருநாளி செல்லும் சாலையில் சின்னூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த TN59CL7958 மகேந்திரா பிக்கப் என்ற வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ய நிறுத்தியபோது அதிலிருந்து டிரைவர் மற்றும் வாகனத்தில் இருந்தவர்கள் காவலர்களை பார்த்ததும் ஓடியுள்ளார். சந்தேகமடைந்த காவலர்கள் வாகனத்தின் உள்ளே சோதனை செய்த பொது அதில் சுமார் 1750 கிலோ ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக கடத்தி வந்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை காவல் நிலையம் கொண்டு வந்து மேற்படி தப்பித்து ஓடியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.*
???? *சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாகனத்தை விரைவாக பிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.*

