திருச்செந்தூரில். ரூ.3.95 கோடியில் மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அடிக்கல் நாட்டினார்.
திருச்செந்தூர், மார்ச் ,28
திருச்செந்தூரில் ரூ.3.95 கோடியில் தினசரி மார்கெட்டிற்கு புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கான இடத்தில் இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
மேலும் அப்பகுதியிலேயே புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய அதிகாரிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திருச்செந்தூர் நகராட்சியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி தினசரி மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.3 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் மூலம் 148 கடைகள் கட்டுவதற்கான பணிக்காக 28ம் தேதி இன்று
அடிக்கல்
நாட்டப்பட்டது.
தற்போது தினசரி மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ள பகுதியின் அருகில் புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்திடவும், புதிய மார்க்கெட் கட்டிடத்தில் ஒரு நபருக்கு ஒரு கடை மட்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தினார். மார்க்கெட்டில் மேலும் கூடுதலாக 148 கடைகள் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்யவும் நகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அப்போது ஆர்டிஓ புஹாரி, தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி கமிஷனர் வேலவன், பொறியாளர் (பொ) ஹசினா, பணி மேற்பார்வையாளர் (பொ) சுதாகர், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், நகர பொறுப்பாளர் வாள்சுடலை, முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஜே.ஜெகன், நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ்கிருஷ்ணா, சோமசுந்தரி, ஒன்றிய கழகச் செயலாளர் ஏ பி ரமேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வேலம்மாள், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரெடி கோ இசக்கி பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

