வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
நாகை மார்ச் 26
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு புறம்போக்கில் வசித்து வந்தவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம், பாப்பாக்கோவில் கிராமம், பெரியநரியங்குடி, ஓடம்போக்கி ஆற்றாங்கரையில் வசித்து வருபவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் வீட்டு மனை பட்டா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி உட்பட அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

