நாகையில் சுதந்திர தின விழா –அமுதப்பெருவிழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி
நாகை மார்ச் 26
இந்திய திருநாட்டின் 75-வதுசுதந்திரதினவிழா அமுதப்பெருவிழா என பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்;டு போட்டிகளுடன் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அவுரித்திடலில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீர பெருமிதங்களை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் அரசின் திட்டங்களை வெளிப்படுத்தும் மற்றும் செயல்படுத்தப்படும் சாதனைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை குறித்த பேச்சுபோட்டிகள் கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்றது.
அமுதபெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு செய்தி மக்கள் தொடா்புத்துறை ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் ஓட்டம் புதிய பேருந்து நிலையம் அவுரித்திடலிருந்து, வெளிப்பாளையம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றடைந்தது. இதில் சுமார் 300 மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

