32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்பிக் நகரில், ஸ்பிக் நிறுவனம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
நிகழ்சி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்று தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்பிக் நகர் குடியிருப்பு முன்பு ஸ்பிக் லயன்ஸ் கிளப் மற்றும் ஸ்பிக் ரோட்டரி கிளப் சார்பாக தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் முதலுதவி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் ஸ்பிக் லயன்ஸ் கிளப் மற்றும் ஸ்பிக் ரோட்டரி கிளப் சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 20 தலைக்கவசங்கள் வழங்கியும், சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன், லயன்ஸ் கிளப் தலைவர் ரவிச்சந்திரன், ரோட்டரி கிளப் தலைவர் முத்தரசன், சென்னை அப்பல்லோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாய்நாராயணன், மருத்துவர்கள் காமேஷ், விக்னேஷ் மற்றும் ஸ்பிக் நிறுவன தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் சேட்டைநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

