பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என
தமிழக முதல்வரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்…
சென்னை, மார்ச்,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க
இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இதுவரை கொண்ட கொள்கை மாறாமல் நன்றியுடன் தங்களின் அடித்தட்டு பணியாற்றுகிறோம் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பாதுகாவலர் எங்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நாங்கள் எதிர்பார்த்திராத மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்கி எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினீர்கள். திமுக ஆட்சிதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் பொற்கால ஆட்சி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள்.
அதற்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களின் மிக முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகளை தங்களின் முன் பணிவோடு சமர்ப்பிக்கிறோம்.
1. எங்கள் எதிர்கால வாழ்வை கேள்விக் குறியாக்கியிருகின்ற புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி எங்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறோம்.
2. பள்ளிக்கல்வித்துறையில் தற்போது உள்ள குழப்பங்களை தீர்த்திட ஒரே வழி மீண்டும் ரத்து செய்யப்பட்ட இயக்குனர் பணியிடத்தை கொண்டுவருவது மட்டுமே என்று பெரும்பாலான ஆசிரியர்கள் கருதுகின்றனர். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கனிவோடு பரிசீலித்து ரத்து செய்யப்பட்ட இயக்குனர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் .
கூடவே அரசாணை எண் 100, 101 ரத்து செய்ய வேண்டும்.
3. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
4.2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும்.
5. நடுநிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு வாய்ப்பின்றி பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் 50 சதவீதத்தை ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.
6. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 171 தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
7. மாற்றுத்திறன் மாணவர்களுக்காக சிறப்பு பயிற்றுனர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
8. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நடைமுறைப்படி உயர்கல்விக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் மனுவாக நேரில் அளித்தார்.இந்நிகழ்வில் மாநில செயலாளர் தி.அருள்குமார் உடனிருந்தார்.

