உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு மரக்கன்று நட்டு, குடிநீர் பரிசோதனை முகாமை பார்வையிட்டார்
வேதாரண்யம் மார்ச் 22
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் மரக்கன்று நட்டார். பின்னர் குடிநீர் தரம் குறித்த பரிசோதனை முகாமினை பார்வையிட்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது
1993 ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. உல கதண்ணீர் தினத்தை ஒருநாளாக கடைப்பிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் அவசியத்தையும், சிக்கனத்தையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
நாம் உலகதண்ணீர் தினத்தை கொண்டாடித்தான் வருகிறோமே தவிர, தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும். உலக நாடுகளில் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமையாகும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கருணாகரன், உதவி நிர்வாக பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர்கள் தியாகராஜன், பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

