சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவையொட்டி நாகை அவுரி திடலில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி மாவட் டஆட்சியர் துவக்கி வைப்பு
வேதாரண்யம் மார்ச் 22
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செய்திமக்கள் தொடர்புதுறையின் சார்பில் 75-வது சுதந்திர தினவிழா சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நடைபெறுவதை தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அவுரிதிடலில்; அமைக்கப்பட்டுள்ள செய்தி மக்கள் தொடர்பு துறையின் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் பலதுறை சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் உடன்கலந்துக் கொண்டார்.
வீரதியாகிகளின் நினைவுகளை போற்றும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் செய்தி துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நேற்று 75- வது சுதந்திர தினவிழா தொடங்கப்பட்டு அதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீர பெருமிதங்களை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் இன்று மாவட்ட செய்தி மக்கள் தொடர்புதுறையின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
இந்த புகைப்படக் கண்காட்சி இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியடிகள் அவர்களின் வரலாறு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ், பாலகங்காதரதிலகர் போன்றோரும், தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளான வ.உ.சிதம்பரனார், நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த தியாகிகளான தாய் சர்தார், தியாகி வைரப்பன், தியாகி ஆறுமுகம், தியாகஞான சம்மந்தம் போன்ற சுதந்திரத்திற்காக போராடிய பல்வேறு தேசதலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.


மேலும், மீன்வளபல்கலைக்கழகம், சமூகநலன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பாரம்பரிய ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உணவு அரங்கம், தோட்டக்கலை, மகளிர் திட்டம், ஊரக புத்தாக்க திட்டம், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பொருட்களின் தரம் குறித்த விழிப்புணர்வு அரங்கம், காவல்துறை, போக்குவரத்து துறை, வேலைவாய்ப்புதுறை, கல்விதுறை, சுகாதாரத் துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கூட்டுறவு கைத்தறி துணிநூல் சார்பில் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகள், வேளாண் பொறியியல், வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் அரசின் திட்டங்களை வெளிப்படுத்தும் மற்றும் செயல்படுத்தப்படும் சாதனைகள் குறித்த கண்காட்சி அரங்குகளை மாவட்டஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

