தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வேதாரணியம் மார்ச் 21
வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4.45 மணிக்கு நடைபெற்றது .
வருவாய்த் துறை அலுவலர்களின் நியாயமான பத்து அம்ச கோரிக்கைகள் மீது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வருவாய்த்துறை அலுவலர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக வெளிநடப்பு செய்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட தலைவர் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.பாஸ்கரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் (புறநகர்) தமிழ்ச்செல்வன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஊழியர்கள் வட்டாட்சியர் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

