தேசிய குடல் புழு நீக்க வாரத்தை ஒட்டி ஒரத்தூர் பள்ளி மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம்
மார்ச் 21
தேசிய குடல் புழு நீக்க வாரம் மார்ச் 14 முதல் 21 வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
செவலியர் ராணி மற்றும் வடவூர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பள்ளி மாணவர்களுக்கு கைகளை சுத்தமாகக் கழுவுவது எப்படி என்று பயிற்சி அளித்தனர்.
மேலும் குடற்புழுக்கள் உடலில் வராமல் உடலை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். குடற்புழுக்கள் உடலில் இருப்பதால் ரத்தசோகை ஏற்பட்டு உடல் நிலை பலவீனமாவது பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாணவர்களுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை கொடுக்கப்பட்டது.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவா பட்டதாரி ஆசிரியர் பாலசண்முகம் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

