வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை இந்து தொடக்கப் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி (இந்து) பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பள்ளியை மேம்படுத்துதல், எதிர்காலப் பணிகள் குறித்து திட்டமிட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியர் டாக்டா் அருண் தம்புராஜ், முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், வட்டார கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், விமலா, பெற்றோர் ஆசிரியர் தலைவர் கோவிந்தராஜலு, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராணி, முன்னாள் தலைவர் நாகூரான், பள்ளி தலைமையாசிரியா் தெட்சணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

