ரத்த தான முகாம்
வேதாரண்யம் மார்ச் 20,
வேதாரண்யத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர்.
வேதாரண்யத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது வேதாரண்யம் நகர திமுக சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவரும், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளருமான கவுதமன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா.குமார் அரசு வழக்கறிஞர் வெங்கடேசன் ,மா.மீ.அன்பரசு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்உள்ளிட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வேதாரண்யம் பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகளும் ஏராளமான ஆண் பெண்களும் ரத்த தானம் செய்தனர். 84 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .இந்த இரத்தான முகாமில் ஏரளமான பெண்கள் உட்பட பொதுமுக்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.


செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

