காவல்துறையின் சார்பில் நூலகம் – மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார் .
நாகப்பட்டினம்
மார்ச் 18
நாகப்பட்டினம் காடம்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்ட நூலகத்தை மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இத்திறப்பு விழாவில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவஹர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் மத்திய மண்டலத்தில் முதன்முறையாக நாகை மாவட்ட ஆயுதப்படையில் தான் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேலும் கிராமப்புற குழந்தைகள் கல்வியறிவில் சிறந்த நிலையை அடைய இது போன்ற நூலகங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்று சிறப்புரையாற்றினார்.


திறப்பு விழாவிற்கு முன்னதாக வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி பகுதியில் உப்பளப் பெண் தொழிலாளர்களை சந்தித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அனைத்து மகளிருக்கும் புடவை வழங்கி அறிவுரை கூறினார்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

