தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தடை தாண்டும் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.
கடந்த 05.03.2022 முதல் 08.03.2022 வரையில், சென்னை ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை இரண்டாம் அணி வளாகத்தில் 61வது தமிழக காவல்துறையினருக்கான மண்டலங்களுக்கு இடையே நீச்சல், சைக்கிளிங், தடை தாண்டுதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ மற்றும் சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தடை தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் பெரிய மாயன் என்பவர் தடை தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
மேற்படி மண்டல அளவில் நடைபெற்ற தடை தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற ஆயுதப்படை காவலர் பெரிய மாயன் என்பவரை இன்று (17.03.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

