வேதாரணியம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் – பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
வேதாரண்யம்
மார்ச் 17
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை முன்னிலையில் வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் பல்வேறு செலவினங்களுக்கான மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் வேதாரணியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 ஒன்றிய குழு உறுப்பினர்களும் தங்களது பகுதிகளிலுள்ள குறைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி பேசினர். செம்போடை ஊராட்சியில் புதிய மயானம் அமைக்கவும், தெரு விளக்குகளை சீரமைக்கவும், குரவப்புலம் ஊராட்சியில் உள்ள குளத்திற்கு படித்துறை அமைக்கவும், செண்பகராயநல்லூர் ஊராட்சியில் சனிசந்தைக்கு செல்லும் சாலையை புதுப்பிக்கவும், தகட்டூர் – ஆதியங்காடு இடையே உள்ள மண் சாலையை தரம் உயர்த்தவும், தாணிக்கோட்டகம் ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றவும் , அண்ணாப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தவும், வாய்மேடு மேற்கு ஊராட்சியில் களிமண் சாலையை தரம் உயர்த்தவும் , கருப்பம்புலம் நடுக்காட்டில் உள்ள குளத்திற்கு படித்துறை மற்றும் அப்பகுதிக்கு தார் சாலை அமைக்கவும், ஆயக்காரன்புலம்- 3 ஊராட்சியில் உள்ள துவக்கப் பள்ளி கட்டிடத்தை பழுது நீக்கி மேலும் ஒரு புதிய கட்டிடம் கட்டவும், கோடிக்கரை, கோடியக்காடு ஊராட்சிகளில் உள்ள குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய மேலா ர் பழ பக்கி ரிசாமி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

