திருக்குவளை வட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்
வேதாரண்யம் மார்ச் 16
வேதாரண்யம் அடுத்த திருக்குவளை வட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.
திருக்குவளை வட்டத்தில் ஒரு பயனாளிக்கு குடும்ப அட்டை, ஒரு முதியவருக்கு மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்டவைகளை வழங்கி நில ஆவணங்கள் மேலாண்மை மையம் சார்பில் தேசிய நில ஆவணங்கள் டிஜிட்டல் மையாமாக்கப்படுவதையும் பார்வையிட்டார்.

முன்னதாக சுதந்திர தின அமுத விழா மற்றும் சங்கமம் நடக்க இருக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நாகப்பட்டினம் நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினையும் மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் நாகை அன்னை சத்யா காப்பகத்தில் உள்ள மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று பள்ளி சென்று வர பேருந்து வசதியை துவக்கி வைத்தார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்,
வேதாரண்யம்.

