ஈம கிரியை மான்யம் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வேதாரண்யம் மார்ச் 16
கிராம ஊராட்சிகளில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இறந்தால், இறுதிச் சடங்கு செய்திட உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் அரசால் இறந்தவரின் குடும்பத்திற்கு அந்தந்த ஊராட்சியின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
2021-2022 ஆம் ஆண்டிற்கு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மேற்படி ஈமக்கிரியை மான்யம் 60 தகுதியானவர்களுக்கு வழங்கிட ரூ.3 இலட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, ஊராட்சிகளில் இந்த மான்யம் பெற தகுதியுடையவர்கள் இருப்பின் உரிய கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் தொடர்புடைய ஊராட்சி மன்ற தலைவருக்கு விண்ணப்பம் அளித்து தொகை ரூ.5 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்,
வேதாரண்யம்.

