மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் நேற்று15.03.2022, சென்னையில் பன்னாட்டு தொழில் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் 1588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசிய தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கென் காங், சாம்சங் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையின் மேலாண்மை இயக்குனர் பியோங் ஜிங் கோன்ங்,சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் சியோங் டியேக் லிம், சம்சங் நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணை மேலாண்மை இயக்குனர் பீட்டர் ரீ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

