வேதாரண்யத்தில் இளையோர் பாராளுமன்ற கருத்தரங்கம்
வேதாரண்யம் மார்ச் 15
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பன்னாள் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து இளையோர் பாராளுமன்ற கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முருகன் தலைமையில் நடந்தது. என்.எஸ்.எஸ் அலுவலர் மாரிமுத்து வரவேற்றார். நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் ஓய்வு பாரத் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் கல்லூரி விரிவுரையாளர்கள் ராஜா, பிரபாகரன், வேதை மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். வேதை ஒன்றிய நேருயுவகேந்திரா சுபஸ்ரீ நன்றி கூறினார்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

