தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வேதியியல் துறை பேராசிரியை ஞா. வான்மதிக்கு “இன்டர்நேஷனல் யுனிசஃப் கவுன்சில், USA-வின் உயரிய “இன்டர்நேஷனல் உமன் எக்ஸெலென்ஸ்” விருது வழங்கப்பட்டுள்ளது.

இது அவரது சீரிய கல்விப்பணி, சமுதாயப்பணி, ஆராயச்சிப்பணி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் புத்தாக்க அறிவியல் பணி மற்றும் அவரது பன்முகத் திறமையையும் பாராட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணுசக்தித் துறையின் நிதியுதவியுடன் சென்னை, ஆர்க்கிட் மருந்துத் தொழிற்சாலையோடு இவர் மேற்கொண்ட ஆராயச்சி முடிவுகள் தொழில்துறை காப்பீட்டைப் பெற்றுள்ளது. NCSTC, DST நிதியுதவியோடு, “நன்நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன.
INSPIRE Program, DST, புதுதில்லி, நிதியுதவியோடு ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்ஸ்பையர் அறிவியல் முகாமை சிறப்பாக நடத்தி வருகிறார். திறமையான மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேமப்படுத்தப்பட வேண்டும் என்பதே இம்முகாமின் நோக்கமாகும். இதன் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இம்முகாமில் தலை சிறந்த அறிவியல் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர்.
கல்லூரி மாணவர்களுக்கான “Training & Orientation Programme”, Science Academy Lecture Workshop in Chemistry மற்றும் சர்வதேச அளவிலான வெப்பினார்கள் பலவற்றைத் திறம்பட நடத்தியுள்ளார். NSS நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரியாக கிராம மக்கள், ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகளுக்கு பல்வேறு நலப்பணித் திட்டங்களான மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், சர்க்கரை நோய் முகாம், வேளாண்துறை வளர்ச்சிப் பணி, கால்நடை மேம்பாட்டு பணி, நீர் மேலாண்மை, அனைவருக்கும் கல்வி, சுய வேலை வாய்ப்பு போன்றவற்றை திறம்பட செயல்படுத்தியுள்ளார்.
இவரது பன்முக செயல்பாட்டுத் திறனைப் பாராட்டும் விதமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி இவருக்கு ” Women Achiever Award” கொடுத்து கௌரவித்துள்ளது. மேலும், சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி, National Young Leader Programme Award , சிறந்த நாட்டுநலப்பணி அணி என பல்வேறு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது NABARD வங்கியின் நிதியுதவியோடு வீடுதோறும் நவீன விவசாயம் என்ற திட்டத்தையும் செயல்படுத்தவுள்ளார்.
