இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லங்குறிச்சி கிராம மக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் சுரேந்தர் அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து, கிராம குற்றத் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டார்.
“தகவல் அளியுங்கள், குற்றத்தை நாங்கள் ஒழிக்கின்றோம்”
அதனைத் தொடர்ந்து 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஜறவரி 18முதல் பிப்ரவரி 17ம்தேதி வரை நாட்டுப்புறக் கலைஞர்கள் நாட்டுப்புற பாடல்கள் மூலமும், எமன் வேடமணிந்தும் மக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டார்கள்.மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப்பிரசுரங்களை அளித்தும்,முகக் கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை மேற்கொண்டும் முக கவசம் அளித்தும் விழிப்புணர்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் .சுமதி புன்னகை தேடி” திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டார்கள். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ,ஆதரவற்று சுற்றித்திரியும் குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தமாக எந்த புகாரையும் அளிக்க சைல்டு ஹெல்ப் லைன் நம்பர்:1098 அழையுங்கள்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன் கயர்லாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் தர்மகர்த்தாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

