• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோடிக்கரையில் 313 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

policeseithitv by policeseithitv
March 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோடிக்கரையில் 313 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோடிக்கரையில் 313 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

வேதாரணியம்

மார்ச் 12

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் கடல் ஆமை முட்டை பொரிப்பகம் உள்ளது. டிசம்பர் மாதம் முதல் கடலோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கடல் ஆமைகள் முட்டை இடும். இரவு நேரங்களில் கடலோர பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடும் வனத்துறையினர் முட்டைகளை சேகரித்துக் கொண்டு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கின்றனர். 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் ஆமை முட்டைகள் ஆமைக் குஞ்சுகளாக வெளிவருகிறது. கடல் ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விடப்படுவது வழக்கம். கடலில் உள்ள பாசிகளையும் , சிறிய மீன்களை உணவாக கொள்ளும் ஜெல்லி மீன் களை கடல் ஆமைகள் உண்பதாலும் மீனவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் இந்தக் கடல் ஆமைகள் கடல் ஓரத்திற்கு வந்து மணற்பாங்கான பகுதிகளில் குழிதோண்டி முட்டையிட்டுச்செல்லும். அதை வனத்துறை சார்ந்த நடேசன், லோகநாதன் உள்ளிட்ட குழுவினர் இந்த முட்டைகளை சேகரித்து ஆமை முட்டை பொரிப்பகத்தில்

வைக்கின்றனர் .

 

இந்த ஆண்டு மழை காரணமாக கடற்கரைப் பகுதிகள் நீர் நிறைந்து இருந்ததால் ஆமைகள் முட்டை இட கடற்கரை பகுதிக்கு வரவில்லை. இந்த ஆண்டு கோடிக்கரையில் 65 ஆமைகளின் முட்டைகள் 6 ஆயிரத்து 976 முட்டைகளும், ஆறுகாட்டுத்துறை 7 ஆயிரத்து 346 முட்டைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி சேகரிக்கப்பட்ட மூன்று ஆமையின் முட்டைகளில் இருந்து 313 ஆமைக் குஞ்சுகள் இன்று அதிகாலை வெளிவந்தன . அதை வனச்சரக அலுவலர் அயூப் கான் மற்றும் மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் முருகவேல் , கோடிக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். பி .சுப்பிரமணியன், இயற்கை ஆர்வலர் சுந்தர்ராஜன் மற்றும் வனத்துறையினர் ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனர். கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் வேக வேகமாக நீந்திச் சென்றது.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

அறுவடைக்கு தயாராக இருந்த நெல்கதிர்கள் சேதமடைந்ததற்கு இழப்பீடு கோரி வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

இலவச கண் சிகிச்சை முகாம்.

Next Post
இலவச கண் சிகிச்சை முகாம்.

இலவச கண் சிகிச்சை முகாம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In