மாவட்டவளர்ச்சிஒருங்கிணைப்புமற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
வேதாரண்யம் மார்ச் 8:
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் 8.2.2022 அன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இணைத்தலைவர் மற்றும் மயிலாடுதுறை எம்.பி இராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்வேளுர் நாகைமாலி, மயிலாடுதுறை ராஜகுமார், சீர்காழி பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் தெரிவித்ததாவது:
இன்றைய தினம் வரலாற்று சிறப்பு மிக்க நாளான தேசியமகளிர் தினம். பெண்களுக்கு சமத்துவமும், சமூகநீதியும், பெண்களுக்கான பாரபட்சமில்லாத ஒரு சமூகத்தை படைப்பதற்கான அமைப்பாக இந்த தேசம் உருவாக வேண்டும். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் 50சதவீதத்திற்கு மேல் பெண்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்திலே பெண்களுக்கு 50சதவீதம் உருவாக்கினார். அதைத் தொடர்ந்து தற்போதைய தமிழக முதலமைச்சர் கடைபிடித்து வருகிறார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 50சதவீதத்திற்கு மேல் பெண்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சமூகத்தின் ஒரு ஏற்றத்திற்கான அடித்தளமாகவும் அமைந்திருக்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்த கண்காணிப்பு குழு கூட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 4 முறை நடத்த வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மத்திய அரசால் அறிவிக்கப்படுகிற திட்டங்கள், நிதிஒதுக்கீடுகள், செம்மையாக செயல்படுகிறதா, அளிக்கப்படுகிறதா, நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா, திட்டங்கள் உரியகாலத்தில் முடிக்கப்படுகிறதா, அதனுடைய திட்டங்களை கண்காணிக்கக் கூடிய அமைப்பு தான் இந்த கண்காணிப்பு குழு. மத்திய அரசு வழங்குகின்ற திட்டங்கள் மக்களிடையே எந்த அளவிற்கு சென்றிருக்கின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இக்கூட்டமானது நடைபெறும். பின்னர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துதுறை சார்பில் மத்தியஅரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலகங்களின் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக இந்தவிழாவில் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் ரூ.41,450 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் ஊன்றுகோல், மடக்கு சக்கர நாற்காலி, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை என 3 மாற்றுத்திறனாளிக்கும், மாவட்ட சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி தொகை, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகைக்கான காசோலையும், 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், 1 திருநங்கையருக்கு டிஜிட்டல் அடையாள அட்டை என மொத்தம் 15பயனாளிகளுக்கு ரூ.7,69,192 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தாட்கோ மூலம் கறவைமாடுகள், டிராக்டர், டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஜெராக்ஸ் கடை, சென்ட்ரிங், மரவேலைப்பாடு, டுரிஸ்ட் வீகில், டாடாஏசி, சோப்பு பவுடர் தயாரித்தல், சாமியான பந்தல் என மொத்தம் 19 பயனாளிக்கு ரூ.29,20,420 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட், 4 பயனாளிகளுக்கு பவர்டில்லர் இயந்திரம், 1 நபருக்கு எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரம், 1 நபருக்கு 4 வரிசை நெல் நாற்று நடவு இயந்திரம், 1 நபருக்கு கால்நடை தீவனம் அரைக்கும் இயந்திரமும் என 13 பயனாளிகளுக்கு ரூ.17,12,144 மதிப்பீட்டிலும், மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறைசார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.24,350 மதிப்பீட்டில் இலவச தேய்ப்பு பெட்டிகள் என மொத்தம் ரூ.54,67,556 மதிப்பீட்டில் 55 பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.. மேலும், வருவாய்துறை சார்பில் 9 பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரினகாப்பாளர் யோகேஷ்குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஷகிலா (நாகப்பட்டினம்), முருகதாஸ் (மயிலாடுதுறை), நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மயிலாடுதுறை மாவட்ட இணை இயக்குநர் (ஊ.வ) முருகண்ணன், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

