உக்ரைனிலிருந்து திரும்பி மருத்துவ மாணவர்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்து நலம் விசாரித்தார்
வேதாரண்யம் மார்ச் 8
நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிலிருந்து உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பதட்டமான போர் நடந்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசின் உதவியோடு சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். இதன் ஒரு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜனனி, வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த லின்சி ஆகியோரை இன்று பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்தார்.


செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

