உக்ரைனில் பதுங்குகுழியில் தங்கியிருந்து , காட்டின் வழியே நடந்து ஊர் திரும்பிய மருத்துவ மாணவர்- மருத்துவப் படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
வேதாரணியம்
மார்ச் 07
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி சார்ந்த நமச்சிவாயம் – அமுதா தம்பதியினரின் இரண்டாவது மகன் அகத்தியன் . இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து மருத்துவ படிப்பில் சேர உக்ரைன் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி புறப்பட்ட அகத்தியன் கார்கிவ்வில் உள்ள கார்கிவ் பன்னாட்டு மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஒரு நாள் மட்டுமே வகுப்பிற்கு சென்ற அவர் அங்கு நிலவிய ரஷ்ய- உக்ரைன் போரின் காரணமாக கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்தார் . போர் உக்கிரமடைந்ததால் விடுதியின் அருகே இருந்த பதுங்கு குழிகளுக்குள் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தஞ்சமடைந்தனர். கடந்த மார்ச் 2-ஆம் தேதி கார்கிவ் பகுதியை விட்டு அனைவரும் வெளியேற உத்தரவிட்டதை அடுத்து காட்டின் வழியே நடந்த அகத்தியன் ரயில்வே நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறி 26 மணி நேரம் நின்றுகொண்டே உணவில்லாமல் பயணித்து செக்கோஸ்லோவியா வந்தடைந்து பின்னர் இந்திய அரசின் தூதரகம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து மாநிலவாரியாக மாணவர்கள் அனுப்பப்பட்டு, சென்னை வந்திறங்கிய அகத்தியன் 7ம் தேதி இன்று சொந்த ஊரான பஞ்சநதி குளத்திற்கு வந்து சேர்ந்தார். பதுங்கு குழிகளுக்குள் தங்கியிருந்தபோது ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு , இருபத்தி ஆறு மணி நேரம் ரயிலில் பயணித்த போது ரயிலில் வந்த தண்ணீரை கைகளால் பிடித்து குடித்ததாகவும் உருக்கமுடன் கூறும் அகத்தியன் சொந்த ஊருக்கு அழைத்து வந்த மத்திய அரசுக்கும், வீடு வரை பாதுகாப்பாக அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.


தன்னுடைய சான்றிதழ்கள் அனைத்தும் உக்ரைன் பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற நிலையில் மருத்துவ படிப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவ மாணவர் அகத்தியனின் எதிர்பார்ப்பு.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

