• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மக்கள் நம்மை நம்பி வெற்றி அடைய செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையுள்ளவர்களாக வெற்றி பெற்றிருப்பவர்கள் இருக்க வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

policeseithitv by policeseithitv
March 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மக்கள் நம்மை நம்பி வெற்றி அடைய செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையுள்ளவர்களாக வெற்றி பெற்றிருப்பவர்கள் இருக்க வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் அரங்கம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வெங்கலசிலையை திறந்து வைத்து பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி எம்.பி கனிமொழி தலைமை வகித்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்,பொன்முடிராஜகண்ணப்பன்,மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் மிகப்பெரியை பெற்றிருக்கும் நிலையில் இது முதல் சுற்றுப்பயணம் இது. வெற்றியை காண்பதற்கு தலைவர் இல்லையே என்று வருத்இருந்தாலும் அவரின் சிலையை திறந்திருக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். இதற்கு முன்னர் பல இடங்களில் திறந்து வைத்திருக்கிறோம். கலைஞரின் தம்பியாக விளங்கிய அண்ணாச்சி பெரியசாமி பிறந்த மண்ணில் அவரால் உருவாக்கப்பட மாவட்ட அலுவலகத்திற்கு முன்னால் கலைஞரின் சிலையை திறந்து வைத்திருக்கிறேன். தலைவர் கலைஞர் மக்கள் பணிகளை நிறைவேற்ற உறுதி கொண்டிருந்தார். அவர் வழியில் நான் உள்பட அத்தனைபேரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது நான் எழுதி கொடுத்ததை கலைஞர் வாசித்து பார்த்தார். அதில் ஒரு திருத்தம் செய்தார். அதாவது நான் மேயர் பதவி என்று போட்டிருந்ததை அவர் மேயர் பொறுப்பு என்று மாற்றியிருந்தார். எனவே பொறுப்பிற்கு வந்திருப்பவர்கள் இதை பதவியாக பார்க்காமல் பொறுப்பாக பார்க்க வேண்டும். அதில் எந்த தவறு நடந்தாலும் நான் கண்காணிப்பேன். அதற்கு உரிய நடவடிக்கையும் எடுப்பேன். இது மிரட்டல் அல்ல. மக்கள் நம்மை நம்பி வாக்களித்திருக்கிறார்கள் அதை நாம் காப்பாற்ற வேண்டும்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் நம்மவர்கள் சிலர் தவறு செய்துவிட்டார்கள். அது குறித்து நான் வருத்தம் தெருவித்தேன். அது கூட்டணி கட்சியினரை திருப்தி படுத்துவதற்காக அல்ல. அந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அந்த விவகாரத்தில் நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதை தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்த இந்த இடத்தில் இருந்து சொல்லுகிறேன். அண்ணா நமக்கு வகுத்து தந்த தாரக மந்திரம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதாகும். அதில் கட்டுபாட்டை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் சொல்லுவார். அவர் சொல்படி நமக்குள் கட்டுப்பாடு வேண்டும்.

மக்கள் நம்மை நம்பி வெற்றி அடைய செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையுள்ளவர்களாக வெற்றி பெற்றிருப்பவர்கள் இருக்க வேண்டும். இப்போது கடும் நடவடிக்கை எடுத்து வரும் நான், விரைவில் உங்களை வாழ்த்தும்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

Previous Post

ஆறுகாட்டுத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு பேருந்து தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் தொடங்கி வைத்தார்.

Next Post

மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.உப்பு உற்பத்தி தொழிலும் முடங்கியுள்ளது

Next Post
மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.உப்பு உற்பத்தி தொழிலும் முடங்கியுள்ளது

மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.உப்பு உற்பத்தி தொழிலும் முடங்கியுள்ளது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In