வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – நாகை மாவட்ட மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
வேதாரணியம்
மார்ச் 06
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புதுச்சேரிக்கு தென்கிழக்கே 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மீன்வளத்துறை உத்தரவுப்படி நாகை மாவட்டத்தில் உள்ள பைபர் படகுகள், விசைப்படகுகள் கடலுக்கு இன்று நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலு பெற்றது. இந்த நிகழ்வு வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தமிழக கடற்கரை அருகே நகர வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வின் பாதை சில சமயங்களில் மேல் நோக்கியும், சில சமயங்களில் கீழ் நோக்கியும் இணைய கணிப்புகளில் சற்று குழப்பத்துடன் உள்ளது. இருப்பினும் இன்று டெல்டா மற்றும் வட கடலோர பகுதிகளில் மழை வருவிக்கும் வகையில் உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு பலத்த தரைக்காற்று வீசக்கூடும். கடல் மிக கொந்தளிப்புடன் காணப்படும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 45km வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

