தமிழக அரசின் சார்பில் வேதாரண்யத்தில் ஒரு கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் அமையவுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ.மதிவாணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வேதாரணியம்
மார்ச் 05
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அரசின் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அனைத்து அடிப்படை வசதிகளுடன் நகர பகுதியில் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இத்தகவல் அறிந்த தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேதாரண்யம் நகர பகுதியில் மூன்றடுக்கு கொண்ட கட்டிடத்தில் தங்கும் விடுதி, படிப்பகம், உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டுமான பணிக்கு ரூபாய் ஒரு கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
இவ்விடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் மாநில திமுக விவசாய அணி செயலாளருமான உ.மதிவாணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அரசின் ஆதிதிராவிட மாணவர்கள் பயிலும் பள்ளி மற்றும் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் ஆதிதிராவிட மாணவர்களை பாதுகாக்கும் வகையில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.

ஆய்வின் போது வேதாரண்யம் நகர மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி,நாகை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அன்பரசு,செயற்பொறியாளர் உதயராமன், உதவி செயற்பொறியாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

